மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கி : இந்தியா சாம்பியன்

இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-12-15 18:23 GMT

மஸ்கட்,

9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. இதில் நேற்று மாலை நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு அரையிறுதியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி றுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் அடித்தன . இதனால் ஆட்டம் சமனில் இருந்தது . இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்