ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்திய அணி நேற்று தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியது.

Update: 2024-11-28 03:10 GMT

image courtesy: Hockey India twitter

மஸ்கட்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 11-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடி வெற்றியோடு தொடங்கியது. இந்திய அணியில் அரைஜீத் சிங், குர்ஜோத் சிங், சவுரப் ஆனந்த் தலா 2 கோல் அடித்தனர். இந்திய அணி அடுத்து ஜப்பானுடன் இன்று மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்