"அணி மிகவும் கடினமாக உழைக்கிறது"- இந்திய ஆக்கி கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இந்த மாதம் தொடங்க உள்ளது.

Update: 2023-09-06 08:10 GMT

image courtesy; PTI

பெங்களூரு,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் 'ஏ பிரிவில்' இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 24ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பேசுகையில், இப்போது ஒட்டுமொத்த நாடும் ஆசிய விளையாட்டுகளை எதிர்பார்க்கிறது. அதிலும் குறிப்பாக ஆக்கி போட்டிகளை மிகவும் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, தகுதிச் சுற்றுக்கு செல்வதை விட, பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கு ஆசிய விளையாட்டுகள் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அதை அடைய குழு மிகவும் கடினமாக உழைக்கிறது என கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்