ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா'

ஆட்டம் டிராவில் முடிந்ததால் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Update: 2023-07-28 21:15 GMT

Image Courtesy : @EnglandHockey twitter

தெரசா,

ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டின் தெரசா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சாம் வார்ட் (இங்கிலாந்து) 5-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (இந்தியா) 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முதலாவது ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வியும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்துடன் டிராவும் செய்து இருந்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களம் கண்டது. டிராவில் முடிந்ததால் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Tags:    

மேலும் செய்திகள்