ஸ்பெயின் ஆக்கி தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இந்திய பெண்கள் ஆக்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது.

Update: 2023-07-29 21:43 GMT

Image Courtesy : @TheHockeyIndia twitter

தெரசா,

ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 3 நாட்டு பெண்கள் அணிகள் இடையிலான ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டின் தெரசா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 6-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதியது.

இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. இந்திய அணியில் லால்ரெம்சியாமி தொடர்ச்சியாக 3 கோல் அடித்து (13-வது, 17-வது, 56-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' சாதனை படைத்து கலக்கினார். கடைசி வரை இங்கிலாந்து அணியால் இந்தியாவின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முந்தைய ஆட்டங்களில் இந்திய அணி, இங்கிலாந்து (1-1), ஸ்பெயினுடன் (2-2) டிரா கண்டு இருந்தது. இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஸ்பெயினுடன் (பிற்பகல் 2.30 மணி) மீண்டும் பலப்பரீட்சை நடத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்