ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை வெளியீடு

சென்னை எழுப்பூரில் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

Update: 2023-06-20 11:37 GMT

சென்னை

சென்னை எழுப்பூரில் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா ஜப்பானை எதிர்கொள்கிறது.

 இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன. அனைத்து அணிகளும் ஓரே குழுவில் இடம் பெற்றுள்ளன. குழுவில் உள்ள நிலைகள் லீக் போட்டியில் பெறும் புள்ளிகளை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

மேலும் இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறுகையில், "2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னையை நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா முதலிடம் பெறுவதை நான் நிச்சயமாக விரும்புகிறேன்.மேலும் அனைத்து நாடுகளும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

இந்தியா (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) ஆகிய இரண்டும் தலா மூன்று பட்டங்களை வென்றுள்ளன. போட்டி வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமாகும்.ஆகஸ்ட் 9 ஆம் தேதி இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகிறது.

தமிழ்நாடு ஹாக்கி பிரிவு தலைவர் சேகர் ஜே மனோகரன் பேசுகையில், "2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னைக்கு சர்வதேச ஹாக்கிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்வமுள்ள ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் ஆட்டம் தொடங்கும் வரை காத்திருக்க முடியவில்லை ஆர்வமாக இருப்பதாக"கூறியுள்ளார்.

தேதி

அணிகள்

நேரம்(in IST)

3 ஆகஸ்ட் 2023

கொரியா vs ஜப்பான்

4 PM

மலேசியா vs பாகிஸ்தான்

6:15 PM

இந்தியா vs சீனா

8:30 PM

4 ஆகஸ்ட் 2023

கொரியா vs பாகிஸ்தான்

4 PM

சீனா vs மலேசியா

6:15 PM

இந்தியா vs ஜப்பான்

8:30 PM

5 ஆகஸ்ட் 2023

ஓய்வு நாள்

6 ஆகஸ்ட் 2023

சீனா vs கொரியா

4 PM

பாகிஸ்தான் vs ஜப்பான்

6:15 PM

இந்தியா vs மலேசியா

8:30 PM

7 ஆகஸ்ட் 2023

ஜப்பான் vs மலேசியா

4 PM

பாகிஸ்தான் vs சீனா

6:15 PM

இந்தியா vs கொரியா

8:30 PM

8 ஆகஸ்ட் 2023

ஓய்வு நாள்

9 ஆகஸ்ட் 2023

ஜப்பான் vs சீனா

4 PM

மலேசியாvs கொரியா

6:15 PM

இந்தியா vs பாகிஸ்தான்

8:30 PM

10 ஆகஸ்ட் 2023

ஓய்வு நாள்

11 ஆகஸ்ட் 2023

5/6 வது இடத்துக்கான போட்டி

3:30 PM

அரை இறுதி1

6 PM

அரை இறுதி 2

8:30 PM

12 ஆகஸ்ட் 2023

3/4 வது இடத்துக்கான போட்டி

6 PM

இறுதி

8:30 PM

Tags:    

மேலும் செய்திகள்