இளையோர் ஆசிய கோப்பை அரையிறுதி; யாஷ் துல் அரைசதம்...இந்தியா 211 ரன்கள் சேர்ப்பு...!

இந்திய அணி தரப்பில் கேப்டன் யாஷ் துல் 66 ரன்கள் அடித்தார்.

Update: 2023-07-21 12:19 GMT

Image Courtesy: @BCCI

கொழும்பு,

8 அணிகள் இடையிலான இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், அபிஷேக் சர்மா 34 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேப்டன் யாஷ் துல் மற்றும் நிகின் ஜோஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் நிகின் 17 ரன், அடுத்து வந்த நிஷாந்த் சிந்து 5 ரன், ரியான் பராக் 12 ரன், துருவ் ஜூரெல் 1 ரன், ஹர்ஷித் ராணா 9 ரன், மனவ் சுதர் 21 ரன், ராஜ்வர்தன் ஹங்கேர்ககர் 15 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் யாஷ் துல் அரைசதம் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் யாஷ் துல் 66 ரன்கள் அடித்தார். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி ஆட உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அல்லது இலங்கை ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்