இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
செஞ்சூரியன்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா (107 ரன்கள்) சதமடித்து அசத்தினார்.
பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து வருண் சக்ரவர்த்தி நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகள் அறுவடை செய்துள்ளார்.
இதன் மூலம் இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. வருண் சக்ரவர்த்தி - 10 விக்கெட்டுகள்
2. அஸ்வின்/ பிஷ்னோய் - 9 விக்கெட்டுகள்