உலகக்கோப்பை கிரிக்கெட்; 2வது வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா...? - ஆப்கானிஸ்தானுடன் நாளை மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் டெல்லியில் மோத உள்ளன.;

Update: 2023-10-10 11:15 GMT

Image Courtesy: AFP

டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ஆப்கானிஸ்தானை டெல்லியில் சந்திக்க உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோல்வி கண்டுள்ளது. இந்திய அணி தனது 2வது வெற்றிக்கும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றிக்கும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளை மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்