பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வி..இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன ?

ஆஸ்திரேலியா, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.;

Update: 2025-01-05 07:42 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில் ,பார்டர் கவாஸ்கர் தொடரின் தோல்வி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சயாளர் கூறியதாவது,

நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் இறுதிவரை போராடினோம்.போட்டிகளை வென்றிருக்கக்கூடிய தருணங்கள் எங்களிடம் இருந்தன. மெல்போர்னில் நாங்கள் சமன் செய்ய முடிந்திருந்தால், அழுத்தம் குறைவாக இருந்திருக்கும். சிட்னியில் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் அபாரமாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

இந்திய டெஸ்ட் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இவ்வளவு சீக்கிரம் பேசுவது சரியாக இருக்காது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும்.என தெரிவித்தார் .

Tags:    

மேலும் செய்திகள்