உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷகிப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம்...?

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷகிப் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-10-14 13:45 GMT

Image Courtesy: AFP

புனே,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. வங்காளதேச அணி 3 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது.

இதையடுத்து வங்காளதேச அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியாவை வரும் 19ம் தேதி புனேவில் சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது அவருக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குவதில் சந்தேகம் நிலவுகிறது. இதனால் வங்காளதேச ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்