உலகக்கோப்பை கிரிக்கெட்: ஒரே போட்டியில் 2 புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா.!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்;

Update: 2023-10-11 15:18 GMT

புதுடெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது.இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன்  களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார் ,

ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்தார்.அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் இதன்மூலம் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் ஆனார் . பின்னர் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த  ரோஹித் சர்மா – ( 556 சிக்ஸர்கள்) முதல் இடத்திலும் , கிறிஸ் கெய்ல் (553 சிக்ஸர்கள்) 2வது இடத்திலும் , அப்ரிடி (476 சிக்ஸர்கள் ) 3வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்