உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தது பாகிஸ்தான் அணி...!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வரும் 20ம் தேதி பெங்களூருவில் மோத உள்ளன.

Update: 2023-10-15 14:00 GMT

Image Courtesy: @TheRealPCB

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 20ம் தேதி ஆஸ்திரேலியாவை பெங்களூருவில் சந்திக்க உள்ளது. இந்த போட்டிக்காக ஆமதாபாத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் இன்று பெங்களூரு சென்றடைந்தனர். இந்நிலையில் பெங்களூரு சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. 



Tags:    

மேலும் செய்திகள்