உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு...!

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-10-31 08:08 GMT

image courtesy; ICC

கொல்கத்தா,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்