உலகக்கோப்பை கிரிக்கெட்; தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி..!!

உலகக்கோப்பை தொடரில் தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-11 04:04 GMT

image courtesy; ICC

தர்மசாலா,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் தாமதமாக வீசியது தெரிய வந்தது. இதனால் அந்த அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.

நடப்பு தொடரில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கிய 2-வது அணி வங்காளதேசம் ஆகும். இதற்கு முன்னர் இலங்கை அணிக்கு இந்த புகாரில் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்