பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்: ஹர்மன்பிரீத் வேண்டுகோள்

எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியுள்ளார்.;

Update:2023-08-09 04:21 IST

மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், '2023-24-ம் ஆண்டு சீசனில் நாங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளோம். இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரு வீராங்கனையாக நானும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்