பெண்கள் டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது

Update: 2023-02-24 16:28 GMT

.கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின நேற்று நடந்த முதலாவது அரையிறுதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடந்தது.

இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் லாரா வல்வார்ட் ரன்களும் , டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடர்ந்து 165ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது . கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 6 ரன்கள் எடுத்தது . இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து சார்பில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அயபோங்கா 4விக்கெட் ,ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினர் .

Tags:    

மேலும் செய்திகள்