மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-27 12:02 GMT

image courtesy: ICC

லண்டன்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதனையொட்டி 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா தங்களது அணியை அறிவித்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:- ஹீதர் நைட் (கேப்டன்), டேனி வியாட், சோபியா டன்க்லி, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், அலைஸ் கேப்ஸி, ஆமி ஜோன்ஸ், சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், சாரா க்ளென், லாரன் பெல், மாயா பவுச்சியர், லின்சே ஸ்மித், ப்ரேயா கெம்ப், டேனி கிப்சன், பெஸ் ஹீத்

Tags:    

மேலும் செய்திகள்