மகளிர் டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பார்ல்,
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹீலி அரை சதமடித்தார்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து 14 ஓவரில் 76 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.