பெண்கள் டி20 கிரிக்கெட்; இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.;

Update: 2023-12-09 16:40 GMT

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது .இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.அதன்படி , முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமலும் , ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும் எடுத்து வெளியேறினர் . பின்னர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது

விக்கெட்டுகள் இழந்தாலும் ஒரு புறம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். அவர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் 16.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆட்டமிழந்தது . இங்கிலாந்து சார்பில் சார்லி டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர் .

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சோபியா டங்க்லி 9 ரன்களும் , டேனி யாட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி மற்றும் நேட் ஸ்கிவர் ப்ரண்ட் சிறப்பாக விளையாடினர். நேட் ஸ்கிவர் ப்ரண்ட் 16 ரன்களிலும், அலைஸ் கேப்சி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹீத்தர் நைட் 7 ரன்களையும், சோபி 9 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 11.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.  3போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.


Tags:    

மேலும் செய்திகள்