மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியீடு

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-13 10:20 GMT

கொழும்பு,

9-வது ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வருகிற 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 19-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்