உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வதுதான் கடினம் - கங்குலி சொல்கிறார்
உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி ,
லண்டன் ஓவலில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சர்ச்சை கருத்துகளும் பரவிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ,
உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகுதான் பிளே ஆஃப் விளையாட முடியும். ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம். ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.