தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி; ஒருநாள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.;
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா வார்னர், லபுஸ்சாக்னே சதத்தால் 392 ரன்கள் குவித்தது. இதையடுத்து 393 ரன் இமாலய இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 269 ரன்களே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு சரிந்தது. 3 முதல் 5 இடங்களில் இந்தியா 114 புள்ளி , நியூசிலாந்து 106 புள்ளி, இங்கிலாந்து 99 புள்ளி அணிகள் உள்ளன.