தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

Update: 2024-09-19 08:57 GMT

image courtesy: ICC

சார்ஜா,

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவர்களில் 106 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வியான் முல்டர் 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் கசன்பார் 3 விக்கெட்டுகளும், ரஷித்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆடிய போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. அந்த நீண்ட கால சோகத்திற்கு இந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்