கொல்கத்தாவின் அதிரடி தொடருமா? சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

Update: 2023-04-14 00:22 GMT

image courtesy: KolkataKnightRiders twitter

கொல்கத்தா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் (பெங்களூரு மற்றும் குஜராத்துக்கு எதிராக) வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவுக்கு எதிராக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 20 பந்துகளில் அரைசதம் அடித்ததும், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசியதும் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் அதிரடியை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகும் கொல்கத்தாவுக்கு சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும். அத்துடன் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் உதை வாங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான மோதலில் எழுச்சி பெற்ற ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதே உத்வேகத்துடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. ஆனால் சுழல் தாக்குதலை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ஐதராபாத்தின் ஸ்கோர் அமையும். முதல் 3 ஆட்டங்களிலும் சொதப்பிய ஹாரி புரூக் இன்றைய ஆட்டத்திலாவது ரன்வேட்டை நடத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்