தொடரை சமன் செய்யுமா இந்தியா..? - கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்..!
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.;
ஜோகன்ஸ்பர்க்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்காவும், நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியாவும் ஆட உள்ளது. அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.