உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது யார்..? - ஜிம்பாப்வே - இலங்கை அணிகள் நாளை மோதல்...!

உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நாளை ஜிம்பாப்வே - இலங்கை அணிகள் மோத உள்ளன.

Update: 2023-07-01 16:43 GMT

image courtesy: Zimbabwe Cricket twitter / @ICC

புலவாயே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றில் மோதும். முடிவில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பைக்கு முன்னேறும். இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 2 முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

தற்போது வரை 6 அணிகளும் தலா 3 போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் புள்ளி பட்டியலில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இர்ண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பேப்வே - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறும். அதனால் நாளை நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்