ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது

வெஸ்ட்இண்டீஸ்-ஐக்கிய அரபு அமீரக அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது.

Update: 2023-06-10 21:09 GMT

வெஸ்ட்இண்டீஸ்-ஐக்கிய அரபு அமீரக அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 36.1 ஓவர்களில் 184 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. அதிகபட்சமாக விரித்யா அரவிந்த் 70 ரன்னும், கேப்டன் முகமது வாசீம் 42 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெவின் சின்கிளைர் 4 விக்கெட்டும், யானிச் சாரியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 35.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அலிக் அதனாஜி 65 ரன்னும், ஷமார் புரூக்ஸ் 39 ரன்னும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஆட்டம் இழக்காமல் 27 ரன்னும் சேர்த்தனர். ஐக்கிய அரபு அமீரக தரப்பில் அயான் அப்சல் கான், முகமது ஜவாதுல்லா, கார்த்திக் மெய்யப்பன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் கெவின் சின்கிளைர் ஆட்டநாயகன் விருதும், பிரன்டன் கிங் தொடர்நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்