எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை - தினேஷ் கார்த்திக்

எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்

Update: 2023-05-23 11:40 GMT

பெங்களூரு,

16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் ஆட உள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 வது இடத்தை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. பெங்களூரு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை மற்றும் முடிவுகள் எங்கள் வழியில் செல்லவில்லை. கனவுக்கான பயணம் தொடரும்.கடினமான சூழ்நிலைகளிலும் எங்களுடன் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்