வார்னர் போராட்டம் வீண்: டெல்லியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி...!

டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் டேவிட் வார்னர் 65 ரன்கள் எடுத்தார்.

Update: 2023-04-08 13:54 GMT

Image Courtesy: AFP 

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிரித்வி ஷா 0 ரன், அடுத்து வந்த மணிஷ் பாண்டே 0 ரன் இருவரையும் முதல் ஓவரிலேயே பவுல்ட் வீழ்த்தினார்.

இதையடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் 14 ரன், லலித் யாதவ் 38 ரன், அக்சர் படேல் 2 ரன், ரோவ்மன் பவல் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி 3 ஆட்டங்களில் ஆடி 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்