சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி
விராட் கோலி தனது 45வது ஒரு நாள் சர்வதேச ஒரு நாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு சாதனையை முறியடித்து உள்ளார்.;
கவுகாத்தி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார் கோலி.
மூன்று வடிவங்களில் இது அவரது 73வது சர்வதேச சதமாகும்.ஒருநாள் போட்டியில் விராட் கோலி 45வது ஒருநாள் சதத்தை அடித்து, சச்சின் தெண்டுல்கரின் மகத்தான சாதனையை சமன் செய்தார்.சச்சினின் 49 ஒருநாள் சதங்களை விட கோலி இப்போது நான்கு சதங்கள் குறைவாக உள்ளார். டெஸ்டில் 27 சதங்களும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் அடித்துள்ளார்.
உள்நாட்டில் 20 சதங்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.கோலி இதனை குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
கோலி தெண்டுல்கரின் மற்றொரு சாதனை முறியடித்து உள்ளார். தனது 45வது ஒருநாள் சதத்துடன், கோலி தற்போது இலங்கைக்கு எதிராக 9 சதங்களை அடித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிக ரன்கள் இதுவாகும்.
தெண்டுல்கர் மற்றும் கோலி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒன்பது சதங்கள் அடித்துள்ளனர்.
கோலி ஒருநாள் போட்டி விவரம்
•போட்டிகள் - 266
•இன்னிங்ஸ் - 257
•ரன்கள்- 12584
•சராசரி - 57.72
•சதம் - 45
•அரை சதம்- 64
•ரன் ரேட் - 93.25