டி.என்.பி.எல்: திருப்பூர் - திண்டுக்கல் ஆட்டம் - மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-07-17 13:41 GMT

Image Courtacy: @TNPremierLeague

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து தற்போது அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்