டி.என்.பி.எல்.: மதுரை - திருச்சி அணிகள் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது

Update: 2024-07-09 10:15 GMT

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் மதுரை - திருச்சி அணிகள் மோத உள்ளன.இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்