டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

Update: 2024-07-28 11:33 GMT

Image Courtesy : @TNPremierLeague

திண்டுக்கல்,

8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் நடந்து வருகிறது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் கேப்டன் ஹரி நிஷாந்த், அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இதில் அரைசதம் விளாசி அதிரடி காட்டிய சுரேஷ் லோகேஷ்வர், 55 ரன்களில் கேட்ச் ஆனார். ஹரி நிஷாந்த் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சரவணன் 25 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுபுறம் அதிரடி காட்டிய ஜெகதீசன் கவுசிக், 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சேப்பாக் அணியில் அபிஷேக் தன்வர், பாபா அபராஜித், சிலம்பரசன், அஸ்வின் கிறிஸ்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்