டிஎன்பிஎல் - நெல்லை அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

தொடர்ந்து 127 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடுகிறது.

Update: 2023-06-14 11:28 GMT

கோவை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. . இதன்படி கோவையில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

நெல்லை அணியின் சிறப்பான பந்துவீச்சால் தொடக்கம் முதல் மதுரை நிதனமாக ஆடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

நெல்லை அணி சார்பில் மோஹன் பிரசாத் 3 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 127 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்