டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் விளையாடுகின்றன.;
சென்னை,
8-வது டி.என்.பி.எல். டி20 தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இவ்விரு அணிகளில் யாருக்கு சாம்பியன் கோப்பை என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.