பார்டர் - கவாஸ்கர் கோப்பை 5-வது டெஸ்ட்: ரோகித் சர்மா விளையாடுவாரா..? கம்பீர் பதில்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.;

Update: 2025-01-02 06:25 GMT

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் கவுதம் கம்பீர் கலந்துகொண்டார். அதில் அவரிடம், கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவாரா என்று? கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கம்பீர், "சிட்னி மைதானத்தை பார்த்த பின் ஆடும் அணியை (பிளேயிங் லெவன்) நாங்கள் தேர்வு செய்வோம்" என்று கூறினார்.

முன்னதாக இந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் குறித்த கேள்விக்கு கம்பீர் இப்படி பதிலளித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்