வங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாண்டோ விலகல்
வங்காளதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக இருந்தார்.;
டாக்கா,
வங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார். இதனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷாண்டோ, வங்காளதேசத்தின் 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார். முன்னதாக 3 வடிவிலான அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஷாண்டோ விலக முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது டி20-லிருந்து மட்டும் விலகியுள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக தொடருவார் என்று கூறப்படுகிறது.