பார்டர் - கவாஸ்கர் கோப்பை: கம்பீரின் கோரிக்கையை நிராகரித்த தேர்வுக்குழு.. வெளியான தகவல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-01-02 04:03 GMT

image courtesy: PTI

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பைகளை வென்று அசத்திய இந்திய அணி, இம்முறையும் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நம்பிக்கையுடன் தொடங்கியது. இருப்பினும் 2-வது மற்றும் 4-வது போட்டியில் தோல்வியை தழுவியது. மழை காரணமாக 3-வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோப்பையை தக்கவைக்க கடைசி போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா விளையாட உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதல் போட்டியை தவிர்த்து மற்ற ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக அமையவில்லை. இதனால் இந்திய வீரர்கள் மீதும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் புஜாராவை சேர்க்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்ததாகவும் அதனை தேர்வுக்குழு தலைவர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி வீரரான புஜாரா கடந்த 2 சுற்றுப்பயணங்களிலும் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்ல பேட்டிங் துறையில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்