டி.என்.பி.எல்: நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.;
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் கோவை, நத்தம் பகுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 3.15 மணிக்கு நடக்கும் 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதின. இதில் லீக்கில் நெல்லையும், 'பிளே-ஆப்' சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசும் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.