டிஎன்பிஎல் 2022 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் பட்டியல் வெளியீடு

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது.;

Update:2022-06-08 17:48 IST

Image Courtesy : Twitter @TNPremierLeague

சென்னை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது.

போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் கேப்டன் கௌஷிக் காந்தி தலைமையில் 22 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அலெக்சாண்டர், அருண், ஹரிஷ்குமார், அருண்குமார், ஜெகதீசன், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், நிலேஷ் சுப்பிரமணியன், பரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசி தேவ், சதிஷ், சித்தார்த், சோனு யாதவ், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார், சுஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்