உம்ரான் மாலிக்குக்கும், ஹாரிஸ் ரால்ப்-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான் - பாக். முன்னாள் வீரர் கருத்து

ஹாரிஸ் ரால்ப் போல் உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சியும் இல்லாதவராக இருக்கிறார் என பாக். முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-23 12:02 GMT

Image Courtesy: AFP/ Twitter 

லாகூர்,

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினார். அவர் ஆரம்பத்திலேயே 145 கி.மீ வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடித்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை பெற்றார்.

இந்திய அணியில் தற்போது 150 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசக்கூடிய வீரர் உம்ரான் மாலிக். இவர் ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முன்னேறி உள்ளார் உம்ரான்.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரில் கூட தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் வெளியே உட்காட வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் 150 கி. மீ. மேல் அதிவேகமாக பந்துவீசக்கூடிய வீரர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், உம்ரான் மாலிக்கின் அதிவேக பந்துவீச்சு குறித்தும், உம்ரான் மாலிக்கை பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப்புடன் வேறுபடுத்தியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உம்ரான் மாலிக் ஹாரிஸ் ராப் போல் பயிற்சி பெற்றவர் அல்ல. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உம்ரான் மாலிக்கை பாருங்கள் அவர் முதல் ஸ்பெல்லில் 150 கி.மீ அதிகமாக பந்துவீசுகிறார். ஆனால் 7 அல்லது 8வது ஓவரில் பந்துவீசும் போது அந்த வேகம் 140 கி.மீக்கு கீழ் குறைகிறது. இது இந்திய பேட்டிங் துறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.

ஹாரிஸ் ராப் போல் உம்ரான் மாலிக் நல்ல பயிற்சியும் பிட்டாகவும் இல்லாதவராக இருக்கிறார். மணிக்கு 160 கி.மீ மேல் பந்துவீசுவது என்னை பொறுத்தவரை முக்கியமல்ல, போட்டி முழுவதும் 160 கி.மீ மேல் பந்துவீசுவதே முக்கியமானது.

ஹாரிஸ் ராப் அதிவேகமாக வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக செயல்படுவதற்காக உணவு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அவரைப் போன்ற வேறு பாகிஸ்தான் பவுலரை நான் பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையும் யாரும் பின்பற்றுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்