2023 ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கே அதிகம்... கூறுகிறார் ஆர்.அஸ்வின்

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து ஆர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-21 07:27 GMT

சென்னை,

இந்த ஆண்டு ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர், நவம்பரில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து தனது கருத்தினை இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,

சொந்த மண்ணில் இந்தியா அனைத்து அணிகளையும் தோற்கடித்துள்ளது. அது ரோஹித் ஷர்மா மற்றும் கோலிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். குறிப்பாக 2019 உலகக் கோப்பை முடிந்ததில் இருந்து இந்தியா தனது சொந்த மண்ணில் பெரிய அளவில் வெற்றிகளை குவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ள அனைத்து தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது.

2011 உலகக் கோப்பையில் இருந்து, உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளே கோப்பையை வென்றுள்ளன: 2011 இல் இந்தியா, 2015 இல் ஆஸ்திரேலியா மற்றும் 2019 இல் இங்கிலாந்து அணிகள் வென்றுள்ளன.

இது அறிவியல் அல்ல.. இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை, நாங்கள் விளையாடும் மைதானங்களின் எண்ணிக்கையின் காரணமாக இது சிறிது மாற்றமடையப் போகிறது. இந்த மைதானங்களில் சில இடங்களில் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகள் வித்தியாசமாக இருக்கும். அது அணி அல்லது வீரரின் பார்வையில் சற்று வித்தியாசமாகவும் கடினமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் தனது யூ டியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்