அந்த சமயத்தில் இந்தியா 'பி' அணியுடன் நாங்கள் விளையாடியதாக கூறினார்கள் - ஹேசல்வுட்

2020/21 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தாங்கள் தொடரை வெல்வோம் என்று நினைத்ததாக ஹேசல்வுட் கூறியுள்ளார்.

Update: 2024-08-18 17:15 GMT

image courtesy: AFP

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடைசியாக நடைபெற்ற 4 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது. அதில் 2 முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

முன்னதாக 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாற்றுத் தோல்வியை கொடுத்தது.

இந்நிலையில் 2020/21 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தாங்கள் தொடரை வெல்வோம் என்று நினைத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் கூறியுள்ளார். மேலும் அப்போட்டியில் சில முக்கிய வீரர்கள் இல்லாததால் கபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 'பி' அணியுடன் ஆஸ்திரேலியா விளையாடுவதாக பலரும் கூறியதாக ஹேசல்வுட் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போட்டியில் இளம் வீரர்களை வைத்தே இந்தியா தங்களை தோற்கடித்ததாக அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் இம்முறை ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் சுதாரிப்புடன் விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவை ஒரு டெஸ்ட் தொடரில் இதுவரை தோற்கடிக்காத சில வீரர்கள் எங்களுடைய அணியில் உள்ளனர். அதை சொல்வது எங்களுக்கே பிரம்மிப்பாக இருக்கிறது. நாங்கள் இம்முறை அதை முறியடிக்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட சொந்த மண்ணில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் வென்று வருகிறோம். கடந்த தொடரில் அடிலெய்ட் நகரில் அவர்களை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினோம்.

அப்போது சொந்த மண்ணில் நாங்கள் மீண்டு வந்து விட்டோம் என்று நினைத்தோம். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 'பி' அணியுடன் நாங்கள் விளையாடியதாக மக்கள் சொன்னார்கள். ஆனால் அப்போட்டியில் இந்தியா தங்களுடைய சிறந்த அணியை விட வலுவான வீரர்களை கொண்டிருந்தது. அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆழமான திறமையைக் கொண்டுள்ளனர். அதை நாங்கள் தற்போது பார்க்கத் தொடங்கியுள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்