இந்த இரு இளம் வீரர்கள் வருங்கால லெஜெண்ட் வீரர்களாக உருவெடுப்பார்கள் - நாசர் ஹுசைன்

சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது அணியின் வெற்றிக்கு பங்காற்றி வருகின்றனர்.;

Update: 2023-12-30 19:27 GMT

Image Courtesy: AFP

மும்பை,

சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது அணியின் வெற்றிக்கு பங்காற்றி வருகின்றனர். இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் ரச்சின் ரவீந்திரா வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருங்கால லெஜெண்ட் வீரர்களாக உருவெடுப்பார்கள் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இளம் வீரர்களில் நான் சுப்மன் கில்லை தேர்வு செய்கிறேன். 2023-ம் ஆண்டில் அவர் முதல் 9 -10 மாதங்கள் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய அவர் நிறைய கற்றுள்ளார்.

கடைசி சில மாதங்களில் அவர் உடல்நிலை சரியில்லாததால் தடுமாறினார். இருப்பினும் அவர் வருங்காலத்தில் இந்தியாவுக்காக அசத்தப்போகும் சூப்பரான திறமை கொண்டவர். அவர் 2024 வருடத்திலும் அசத்துவார் என்று நம்புகிறேன்.

மேலும், உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியதை நான் பார்த்துள்ளேன். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் மிடில் ஆர்டரில் வந்து அதிரடியாக விளையாடினார். தற்போது டாப் ஆர்டரில், கொடுத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த முன்னேற்றத்தை அவர் தொடர்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்