"உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்பதே கிடையாது" - விராட்கோலி

உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-19 03:05 GMT

டெல்லி,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி தேவையாகும்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டியை சூப்பராக தொடங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கிய இந்தியா புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி, 'உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.

அவர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது. பெரிய அணி என்று குறிப்பிட்ட ஒரு அணி மீது கவனம் செலுத்த தொடங்கும் போது அது நெருக்கடிக்கு ஆளாகி அதிர்ச்சி தோல்வியை சந்திக்க நேரிடும்' என்று தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்