மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம்..! பிங்க் நிற ரசிகர்கள் எங்கே..?- சஞ்சு சாம்சன் மறைமுக பேச்சு
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் -சென்னை அணிகள் மோதின.
ஜெய்ப்பூர்,
ஐபிஎல்-லில் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் டாஸின்போது பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணி 200 போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக பிங்க் நிறத்தில் வருவார்கள் என எதிர்பார்த்ததாகவும் ஆனால், மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருப்பதாக கூறினார்.
அதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும் எனவும் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.