ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி, ரோகித்தை பின்னுக்கு தள்ளிய அயர்லாந்து வீரர்.!

அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார்.

Update: 2023-05-18 10:19 GMT

துபாய்,

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் 23 வயதான அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார்.

அதோடு இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிகாக்கை அவர் முந்தியுள்ளார். தற்போது 722 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் அவர் உள்ளார். அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார்.

இதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார். அதோடு ரோகித், ஸ்மித், டிகாக், பட்லர், கோலி ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.

இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஜமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8-வது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்