குஜராத்-க்கு எதிரான இறுதிப்போட்டியே கடைசி..! ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை வீரர் ராயுடு அறிவிப்பு

குஜராத் -க்கு எதிரான இறுதிப்போட்டியுடன் , ஐபிஎல்லில் இருந்து ஒய்வு பெறுவதாக சென்னை அணியின் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.

Update: 2023-05-28 12:48 GMT

Image Courtesy : IPL 

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் குஜராத் -க்கு எதிரான இறுதிப்போட்டியுடன் , ஐபிஎல்லில் இருந்து ஒய்வு பெறுவதகவும் சென்னை அணியின் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள் , 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். . இது ஒரு நல்ல பயணம்.இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன்.அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.

ராயுடு மும்பை அணிக்காக 2010 இல் தனது ஐபிஎல்லில் அறிமுகமானார் மற்றும் 2017 சீசன் வரை அந்த அணிக்காக விளையாடினார், பின்னர் ராயுடு 2018 சீசனில் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

மும்பை அணிக்காக 3 கோப்பைகளையும் , சென்னை அணிக்காக 2 ஐபிஎல் கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்