2023ம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பிளேயிங் லெவன் - கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த அணி...2 இந்தியர்களுக்கு இடம்..!
2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பிளேயிங் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது.;
மெல்போர்ன்,
2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பிளேயிங் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசைக்கு உஸ்மான் கவாஜா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து 3 முதல் 5 இடங்களுக்கு முறையே கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. இந்த அணியின் விக்கெட் கீப்பராக லோர்கன் டக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும், இதையடுத்து பந்துவீச்சாளர்களாக பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்; உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ககிசோ ரபாடா, ஸ்டூவர்ட் பிராட்.